அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்தது கழுத்தை அறுத்து புதுமாப்பிள்ளை கொலை!!

Read Time:4 Minute, 54 Second

Tamil-Daily-News_19042170048கொருக்குப்பேட்டையில் அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். சடலத்தை கூவத்தில் வீசி சென்றுள்ளனர். அவருடன் இரண்டு நாட்களுக்கு முன் தகராறு செய்த ஆசாமிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

கொருக்குப்பேட்டை பாரதி நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இ பிளாக்கில் வசிப்பவர் ஏழுமலை. இவரது மகன் கமல் (27), அதே பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கும் பொன்னேரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.

திருமண செலவிற்காக தனது நண்பர் ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு இருந்தார் கமல். நேற்று முன்தினம் இரவு நண்பரிடம் பணத்தை வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கமல் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர் இரவு முழுவதும் கமலை தேடினர். இந்நிலையில் ஏழுமலை வீட்டின் பின்புறத்தில் கூவம் ஆற்றில் நேற்று காலை வாலிபர் சடலம் ம¤தந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவலறிந்து, ஆர்கே நகர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலத்தை மீட்டனர். கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது.

மேலும், உடலில் ஆங்காங்கே வெட்டுக்காயம் இருந்தது. விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர், கமல் என தெரிந்தது. அங்கு வந்த அவரது தந்தை ஏழுமலை, உறவினர்கள் கமலின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி குடிசை மாற்று வாரியத்தின் பின்புறமுள்ள முட்புதரில் நின்றது. அங்கு பார்த்தபோது தரை முழுவதும் ரத்தம் உறைந்து கிடந்தது.

அதன்பின் மோப்பநோய் பாரதி நகர் மெயின் தெரு வரை ஓடி சென்று நின்றது. கொலையாளிகள் குடியிருப்பின் பின்புறம் வைத்து கமலின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, சடலத்தை கூவம் ஆற்றில் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக, ஆர்கே நகர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், கொருக்குப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டி, வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் தன்ராஜ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், கமலுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு அடிதடி நடந்துள்ளது. இந்நிலையில் கமல் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தொடர் கொலையால் வடசென்னை மக்கள் பீதி

கடந்த ஒரு வாரத்தில் வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் தொடர்ந்து 4 கொலைகள் நடந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் இந்த கொலை சம்பவங்களால் பொதுமக்கள் மட்டுமின்றி போலீசாரும் நிலைகுலைந்து போயுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாநகர போக்குவரத்து கழக மெக்கானிக் கை, கால்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இதனால், வடசென்னை பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ”கட்” வைத்த பாவாடைகளில் இது கொஞ்சம் தனித்துவமானது !!(PHOTOS)
Next post ஹன்சிகாவை போல் கொழு கொழுவென வர துடிக்கும் ப்ரியா ஆனந்த்!!