கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

Read Time:2 Minute, 56 Second

Ani.SexGirlsகண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்கள் புடவை அணிந்து சென்னை கோட்டை அருகே ஜாலியாக நடந்து செல்கின்றனர்..


சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் மசெராட்டி என்ற உயர்ந்த வகை காரை வாங்கினார். ஆனால், காரில் ஏற்பட்ட பழுதை, சம்பந்தப்பட்ட நிறுவனம் சரியாக பழுது நீக்கி தராததால் ஆத்திரம் அடைந்த அவர், கிங்டாவ் நகரில் நேற்று நடந்த சர்வதேச கார் கண்காட்சி வளாகத்தின் முன்பு தன்னுடைய காரை ஆட்களை வைத்து தாறுமாறாக உடைக்கச் செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த காரின் விலை ரூ23 கோடி

ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் நக்சலைட் ஆதிக்கம் உள்ளது. அங்கு மக்கள் பிரச்னையை தீர்க்க நக்சலைட்கள் பஞ்சாயத்து நடத்துகின்றனர்.

கேரளாவில் இருந்து ஓடுகள் ஏற்றிச் சென்ற லாரியும், நாமக்கல்லில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரியும், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த தெக்கலூரில் 6 வழிச்சாலையில் நேற்று காலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், 2 டிரைவர்களும் பலியாயினர்.

சீனாவின் டன்ஹூவாங்குவில் உள்ள யூயாகுவான் கிரெசன்ட் ஏரிதான் இது. பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள ஏரியையொட்டி அமைந்துள்ள குட்டி நகரம் சுற்றுலா தலமாகும். இதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று திடீரென புழுதிப்புயல் வீசியது. இதனால் நகரமே மஞ்சள் நிறமாக மாறியது. வழி தெரியாததால் முன்னேறிச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சாலையிலேயே தவித்தனர்.

கொல்கத்தாவில் கங்கை நதியில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்வதற்காக மச்ச கன்னி என்ற சொகுசு படகை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகளுடன் படகு சவாரி செய்கிறார் மம்தா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை!!
Next post இலங்கை அமைச்சருக்கு சுவிட்சலாந்தில் கவச வாகன பாதுகாப்பு! புலிகள் அச்சுறுத்தல்?