கள்ள நோட்டு கும்பல் தலைவன் கைது!!
மூலக்கடையில் கடந்த ஜனவரி 18ம் தேதி வாகன சோதனையின்போது காரில் 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுங்கையூர் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் கள்ள நோட்டுகளை கடத்திய முனாப்(எ) அப்துல் முனாப், வசீம் ராஜா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
தப்பி ஓடிய கள்ள நோட்டு கும்பல் தலைவன் சரவணனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் சரவணன் தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தஞ்சாவூருக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த சரவணனை கைது செய்தனர்.