சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிற்கூடங்களில் வரிமோசடி!!
பாலியல் தொழில் சட்டமயமாக்கப்பட்டு வருமானவரி வசூலிக்கப்படும் சுவிட்சர்லாந்தில் இத்தொழில் பலவகையிலும் நடைபெற்று வரும் செக்ஸ் பார்லர்களில் வரி மோசடி நடப்பதால் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
ஹங்கேரியைச் சேர்ந்த ஒருவர், ஜெனீவாவில் எட்டு இடங்களில் சலூன் பார்லர் வில்லா என்ற நவீன பெயர்களில் பாலியல் தொழிற்கூடங்கள் நடத்தி வருகிறார். இவற்றில் தனது நாட்டுப் பெண்கள் 70 பேரை பாலியல் தொழிலாளிகளாக அமர்த்தியிருக்கிறார்.
இவர் பல மில்லியன் ஃபிராங்க் வரி செலுத்தாமல் மோசடி செய்திருப்பதாக சந்தேகப்பட்ட அரசு அதிகாரிகள் இந்த இடங்களில் சோதனை நடத்தினர்.
பெர்ன் மற்றும் ஜெனீவாவைச் சேர்ந்த வருமானவரி அதிகாரிகளும், ஜெனீவா மாநிலப் பொலிஸ் படைகளும் இணைந்து இந்த அதிரடிச் சோதனையை நடத்தினர்.
மாநில மற்றும் மத்தியக் கூட்டரசு அதிகாரிகள் கூட்டாக அங்கு நடத்திய சோதனையில் ஏராளமானவற்றை கைப்பற்றினர். மேலும் பல விசாரணைகளும் நடந்து வருகின்றனர்.
இந்த விடுதிகளோடு தொடர்புடைய அமெரிக்காவைச் சேர்ந்த அல் கபோன்(Al Capone) என்பவையும் அதிகாரிகள் விசாரித்ததாக ஊடகத்தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கு பணிபுரியும் ஹங்கேரிப்பெண்களுக்கான பணிச்சூழல் மோசமாக இருப்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.