கிண்ணியாவில் 13 வயதுச் சிறுமியப் பலாத்காரம் செய்த 49 வயது நபர்!!
திருகோணமலை, கிண்ணியா நடுவுற்று பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியை பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சந்தேகநபர் சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
49 வயதான சந்தேகநபர் நேற்று (25) கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் இவர் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.