திருமணமான பெண்ணை அடைத்து வைத்து செக்ஸ் டார்ச்சர் செய்த காமக் கொடூரன் கைது!!

Read Time:3 Minute, 51 Second

kamakoசேலத்தை சேர்ந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து, வீடியோ எடுத்து மிரட்டி, தொடர்ந்து உல்லாசத்துக்கு பயன்படுத்தி, “செக்ஸ் டார்ச்சர்’ செய்த, காமக் கொடூரனை, தாரமங்கலம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சேலம், கே.ஆர்.தொப்பூர், கோனகாபாடியை சேர்ந்தவர், தேவி, 27. இவர், எஸ்.பி.,யிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

எனக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கணவர், சிவில் இன்ஜினியர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தாரமங்கலம், கருக்கல்வாடியை சேர்ந்த பூபதி, 28, அவரது பிசினசில் சேர்ந்து கொள்ளும்படி கூறி, கிருஷ்ணகிரியில் நடக்கும் மீட்டிங்கிற்கு, காரில் என்னை அழைத்து சென்றார்.

பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பூபதி, காரிலேயே என்னை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து கொண்டார். அந்த படத்தை, இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும், கணவரிடம் காண்பித்து விடுவதாகவும் கூறி, அடிக்கடி என்னை மிரட்டி, இச்சைக்கு பயன்படுத்தி கொண்டார்.

என் கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவதாகக் கூறி, என்னை, தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, என் கணவருக்கு எதிராக, போலீசில் புகார் கொடுக்க வைத்தார்.

இதனால், கணவர் மற்றும் குடும்பத்தினர், என்னை விட்டு பிரிந்த நிலையில், எட்டு மாதமாக, என்னை வீட்டில் அடைத்து, பூபதி, உடல் முழுவதும் நகம், பற்களால் காயப்படுத்தி, “செக்ஸ் டார்ச்சர்’ செய்து கொடுமைப்படுத்தி வந்தார்.

திருமணமாகி, ஒரு குழந்தை உள்ள பூபதி, தன் பெயரை, மகேஷ், திருமணமாகாதவர் எனக் கூறி, டாக்டர், போலீஸ், பத்திரிகை நிருபர் என்ற போர்வையில், பெண்களை ஏமாற்றி வருகிறார்.

மிரட்டி வருகிறார்:

பூபதியிடம் இருந்து தப்பித்து, என் கணவரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினேன். அவர் என்னை மன்னித்து, ஏற்றுக் கொண்டார். கணவர், குழந்தைகளுடன், ஒரு மாதமாக சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், பூபதியுடன், நான் இருந்த வீடியோ படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, 5 லட்சம் ரூபாய் கேட்டு, “பிளாக் மெயில்’ செய்வதுடன், கணவர், குழந்தைகளை கொலை செய்வதாக மிரட்டி வருகிறார்.

காமக் கொடூரன் பூபதியிடம் இருந்து என்னை காப்பாற்றி, அவரிடம் உள்ள வீடியோ, புகைப்படங்களை மீட்டு, தகுந்த விசாரணை மேற்கொண்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேவி அளித்த புகார் மனு மீது, விசாரணை நடத்த, எஸ்.பி., சக்திவேல் உத்தரவிட்டார். இது தொடர்பாக, விசாரணை நடத்திய தாரமங்கலம் போலீசார், பூபதியை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாலை நேர குளியல் மனசுக்கு நல்லதாம் !!(PHOTOS)
Next post ஒரே ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடக்கின்றது.. (VIDEO)