இராக்குக்கு புஷ் திடீர் பயணம்
Read Time:42 Second
இராக்குக்கு திடீர் பயணமாக அமெரிக்க குடியரசுத் தலைவர் புஷ் செவ்வாய்க்கிழமை வந்தார். அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. புஷ்ஷின் வருகையை அவரை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான் இராக் பிரதமர் நுரி-அல்-மலிகி வெளியிட்டார். அமெரிக்க தூதரகத்தில் இராக் அதிகாரிகளை புஷ் சந்தித்தார். அமெரிக்க படையெடுப்புக்கு பிறகு இராக்குக்கு 2-வது முறையாக அவர் வந்தார்.