தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி எம்.பி

Read Time:2 Minute, 16 Second

smiley-faceகொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி.
கடந்தவார இறுதியில் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:

நீதியசரர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் புதல்வரின் திருமணம் கடந்தவார இறுதியில் கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். அத்துடன் அங்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பெருமளவானோர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

மணமக்கள் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆசியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி திரும்பிய போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியின் காலடியில் விழுந்தார்.

உடனே எல்லோரும் விநாயமூர்த்தியும் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார் என்று எண்ணினர். ஆயினும் நடந்தது அது வல்ல. மணமக்களை வாழ்த்துவதற்குச் சென்ற விநாயகமூர்த்தி தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலடியில் விழுந்துவிட்டார்.

உடனே அங்கிருந்த ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அவரை தூக்கிவிட உதவினர். ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியை தூக்குவதற்காக கையை நீட்டினார். அதற்குள் விநாயகமூர்த்தி சமாளித்துக் கொண்டு தானே எழும்பி நின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆச்சிரியப்படாதீர்கள் .. இவரும் ஒரு உள்ளூர் மொடல்தான் !!(PHOTOS)
Next post காதலிக்க போகிறீர்களா? இந்த 10 விடயங்களை படித்துவிட்டு முடிவெடுங்கள்!..