பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்!!
Read Time:1 Minute, 16 Second
அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாத்திமா அல் கப்லி (46) கணிதவியல் இளங்கலை பட்டமும் அவரது மகன் சலாம் (22) பெட்ரோலிய பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றனர்.
தனது கணவரைப் போல் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று முனைவராவதுதான் தனது வாழ்நாள் இலட்சியம் என பாத்திமா அல் கப்லி தெரிவித்துள்ளார். தாயாரின் கல்வி வேட்கைப் பற்றி கருத்து கூறிய சலாம், ‘என்னை விட எனது தாயார் நல்ல அறிவு கூர்மையுடன் உள்ளார்.
எனது பாடங்களிலும் அவர் உதவியாக இருக்கிறார். அவருடன் சக மாணவனாக ஒரே பல்கலைக்கழகத்தில் பயின்றதும், பட்டம் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம்’ என்றார்.
Average Rating