பெண்கள் மேலாடையின்றி போராட்டம்: டுனிஷியாவில் பரபரப்பு!!

Read Time:2 Minute, 8 Second

french_femen_02பெமன் எனப்படும் பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் மேலாடை இல்லாமல் டுனிஸ் நகரில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரபு நாடு ஒன்றில் இப்படி அரை நிர்வாணப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்பதால் இந்த போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டுனிஷியா தலைநகர் டுனிஸ் நகரில் இந்தப் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களில் இருவர் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள் மற்றொருவர் ஜேர்மானியார்.

டுனிஷியாவில் இஸ்லாமிய மதத்தீவிர கொள்கையாளர்களுக்கு எதிராகப் போராடி கைது செய்யப்பட்டுள்ள அமீனா என்ற பெண்ணை விடுதலைசெய்யக் கோரி இந்தப் போராட்டத்தில் மூன்று பெண்களும் ஈடுபட்டனர்.

இடுப்பில் ஷார்ட்ஸ் மட்டுமே இந்தப் பெண்கள் அணிந்திருந்தனர். மேலாடை எதுவும் இல்லை. வெற்று மார்புடன், பிரஸ்ட் பீட் புரட்சி என்றும் பெமன் தீவிரவாதி எனவும் தங்களது உடலில் பெயிண்ட் செய்திருந்தனர்.

இப்போராட்டத்தில ஈடுபட்ட பெண்களுக்கு பெரும் எதிர்ப்புகளும் காணப்பட்டன. இந்தப் போராட்டத்தை செய்தி சேகரிக்க வந்தவர்களை பொதுமக்கள் சிலர் தாக்கவும் செய்தனர். இதுபோன்ற போராட்டங்களுக்கு ஊடகங்கள் தான் ஆதரவு தருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 11-வயது சிறுமியை கொடூரமாக எரித்துக் கொன்ற பெண்கள் கைது!!
Next post காங்கோ குடியரசில் தொடரும் பாலியல் வன்முறை: ஐ.நா மனித உரிமை குழு நடவடிக்கை!!