காங்கோ குடியரசில் தொடரும் பாலியல் வன்முறை: ஐ.நா மனித உரிமை குழு நடவடிக்கை!!

Read Time:1 Minute, 46 Second

மொனராகலை – குமாரதொலபிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் துணைவியான வலேரீ ட்ரையர்வீலர்(Valérie Trierweiler) ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைக் குழுவின் 23ஆவது கூட்டத்தில் உலகின் கற்பழிப்புத் தலைநகராக விளங்கும் காங்கோ குடியரசு பற்றிப் பேசவுள்ளார்.

டினாயர்வீயர்(48) முதலில் ஒரு ஊடகவியலாளராக இருந்துள்ளார். தற்போது Fondation France Libertes இன் தூதுவராக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

காங்கோ குடியரசை ஒருமுறை ஒரு ஐ.நா அதிகாரி The Rape Capital of the World என்று குறிப்பிட்டார். இங்கு நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு ஒரு முடிவு கட்டவே ஐ.நாவின் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

காங்கோவில் கடந்த 2006ம் ஆண்டில் போர் முடிந்துவிட்டாலும் தொடர்ந்து அங்கு அனுமதியற்ற சூழ்நிலையே நிலவி வருகின்றது. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த போராளிகள் திடீர் தாக்குதல் நடத்துவதும், பெண்களைக் கற்பழிப்பதுமாக இருக்கின்றனர்.

மேலும் இங்கு பழங்குடிகள் தமக்குள் மோதிக்கொள்வதினால் ஒரு சாரார், மற்றொரு சாராரின் பெண்களைக் கற்பழிப்பதும் சகஜமாகிவிட்டது.

இந்த ஐ.நா மனித உரிமைக் குழுக் கூட்டங்கள் இன்று தொடங்கி வருகின்ற யூன் மாதம் 14ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் மேலாடையின்றி போராட்டம்: டுனிஷியாவில் பரபரப்பு!!
Next post கமராவில் சிக்கிய இல்லத்தரசியின் டாப்லெஸ் படங்கள் !!(PHOTOS)