சீனாவில் முகமூடி விற்க தடை!!

Read Time:1 Minute, 48 Second

852maskசீனாவில் அண்மையில் இடம்பெற்ற போராட்டங் களின் போது முகமூடி அணிந்து பலர் வன்முறையில் ஈடுபட்டதன் விளைவாக, போராட்டக்காரர்களை அடையாளம் காண்பதில் பொலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், சீனாவில் பிளாஸ்டிக் முகமூடிகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், பொலிஸார் தங்களை அடையாளம் காண இயலாத படி முகமூடிகளை அணிந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதனால், வன்முறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதில் பொலிஸார் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, குழப்பங்களைத் தடுக்க முகமூடிகள் விற்பனைக்கு சீனாவின் பல நகரங்களில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 6ஆம் திகதி முதல், குன்மிங் நகரில் ‘தெற்காசிய கண்காட்சி’ நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடைபெற இக்கண் காட்சியில் பல தெற்காசிய நாடுகள் தங்களின் உற்பத்தி பொருட்களை இங்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன. எனவே, இக்கண் காட்சிக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடி விற்பனைக்கு குன்மிங் நகர நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகையின் உடலை பதம்பார்க்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் கைகள்!!(PHOTOS)
Next post கட்டிட தொழிலாளர் கதையில் ரூபா மஞ்சரி!!