இளம் பொலிவூட் நடிகை ஜியா கான் தற்கொலை!!

Read Time:2 Minute, 4 Second

Bollywood-news-695பொலிவூட்டின் இளம் நடிகையான ஜியா கான் இன்று மும்பையில் தூக்கி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிவூட்டின் முன்னாள் நட்சத்திரங்களான ரிஸ்வி கான் மற்றும் ராபியா அமீன் தம்பதியின் புதல்வியே இந்த ஜியா கான்.

இவர் இங்கிலாந்திலிருந்து நடிகையாக மும்பைக்கு அவரது தாய் ராபியா அமீனுடன் குடியேறினார். 2007ஆம் ஆண்டு அமித்தாப் பச்சானுடன் சர்ச்சையை ஏற்படுத்திய நிஷாப்த் படத்தில் கவர்ச்சி நாயகியாக அறிமுகமானார் ஜியா கான். பின்னர் கஜினி மற்றும் ஹவுஸ்புல் படங்களிலும் நடித்தார். இதன் பின்னர் ஏராளமான பட வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் சொந்த காரணங்களுக்காக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். மொத்தமாக 3 படங்களிலேயே நடித்திருந்தாலும் பொலிவூட்டில் பிரபலமாகவே இருந்தார் ஜியா கான்.

இதேவேளை அண்மைக்காலமாக மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வந்ததுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவரது தற்கொலையானது பொலிவூட்டில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஜியா கானின் மறைவிற்கு பிபாசா பாசு, ரியா சென், அனுரக் உள்ளிட்ட பல பொலிவூட் நட்சத்திரங்களும் இரங்கலும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர். அண்மையில் நபீஸா கான் என தனது பெயரை மாற்றியமைத்தார் ஜியா கான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 வயது சிறுமி பலாத்காரம் உ.பி. வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!!
Next post யார் இந்தக் குழந்தை!!