கடவுளின் குளியல் தொட்டி கண்டுபிடிப்பு!!(PHOTOS)

Read Time:1 Minute, 48 Second

900bathtubஅவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள ஏரி­யொன்றின் நீர் கடந்த 7,500 வருடங்­க­ளாக கால­நிலை மாற்­றத்­தாலோ வேறு தாக்­கங்­க­ளாலோ மாற்­ற­ம­டை­யாத நிலையில் உள்ளதாக விஞ்­ஞா­னிகள் ஆய்­வு­களின் மூலம் அண்­மையில் கண்­ட­றிந்­துள்­ளனர். இந்த ஏரி­யி­லுள்ள பளிங்குபோல் தெளி­வாக உள்­ள­துடன் மிகத் தூய்­மை­யா­ன­தா­கவும் உள்­ளது.

இந்த ஏரியை கட­வுளின் குளி­யல்­தொட்டி என மேற்­படி ஆய்வை மேற்­கொண்ட அடிலெய்ட் பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞா­னிகள் வர்ணித்துள்­ளனர். அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிரிஸ்பேன் நக­ருக்கு 50 கிலோ­மீற்றர் தொலைவில் இந்த ஏரி உள்­ளது. இந்த ஏரியின் நீர் சுமார் 35 நாட்­க­ளுக்கு ஒரு தடவை அரு­கி­லுள்ள பள்­ளத்­தாக்­கிற்கு வடிந்து சென்று ஊற்­றுக்­களால் மீண்டும் நிரப்­பப்­ப­டு­வ­தா­கவும் இத்­த­கைய ஏரிகள் மிக அபூர்வமா­னவை எனவும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கோடை ­கா­லத்தில் நீல நிற­மாக இந்த ஏரி காட்­சி­ய­ளிக்­கி­றது.

மாரி காலத்தில் சாம்பல் நிற­மாகத் தென்­ப­டு­கி­றது. இந்த ஏரியின் நீர் மிகத் தெளி­வாக உள்ளதால் 10 மீற்றர் ஆழம்வரை தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளது என கலாநிதி கமெரோன் பர் தெரிவித்துள்ளார்.
900bathtub900_line (1)900_line

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பாவிலும் டுனிஷியாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள்!!
Next post முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும், கவர்ச்சி நாயகியுமான எஸ்தர் மரணம்!!