முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும், கவர்ச்சி நாயகியுமான எஸ்தர் மரணம்!!

Read Time:1 Minute, 42 Second

902estherஇங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையும், ஹொலிவூட்டின் கவர்ச்சி நாயகியுமான எஸ்தர் வில்லியம்ஸ் அவரது 91ஆவது வயதில் நேற்று லண்டனில் மரணமடைந்தார். 1940ஆம் ஆண்டு நீச்சல் போட்டியில் சம்பியனாக திகழந்த எஸ்தர் வில்லியம்ஸ், ஹொலிவூட்டிலும் தடம் பதித்தார். கறுப்பு வெள்ளை படங்கள் எடுத்த அந்தக் காலத்திலேயே நீச்சலுடையில் திரையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்தார்.

இவருடைய கவர்ச்சியை நம்பி பெருந்தொகைப் பணத்தை பணத்தை முதலீடு செய்ததுடன் இலாபமும் அடைந்தனர். ஜீன் கெல்லி, ப்ரேங் உள்ளிட்ட புகழ்பெற்ற நடிகர்களுடன் எஸ்தர் ஜோடியாக நடித்து பெரும் பிரபல்யமானார். பின்னர் 1962ஆம் ஆண்டு பெணான்டோ லமாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்டார். கடந்த சில காலமாக எஸ்தர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அவருடைய வீட்டில் வைத்து தூக்கதிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் மறைவினையடுத்து ஹொலிவூட்டைச் சேர்ந்த பலரும் அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடவுளின் குளியல் தொட்டி கண்டுபிடிப்பு!!(PHOTOS)
Next post 5 சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!!