மாதவரத்தில் பயங்கரம் லாரி புக்கிங் உரிமையாளர் சரமாரி வெட்டி கொலை!!

Read Time:3 Minute, 17 Second

Tamil-Daily-News_86746942997லாரி புக்கிங் ஆபீஸ் உரிமையாளர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்தவர் முருகன் (43). இவரது மனைவி சந்தான லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாதவரம் சிஎம்டிஏ வளாகத்திலுள்ள கட்டிட முதல் மாடியில் லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வந்தார் முருகன்.

நேற்று காலை முருகன் தனது காரில் வந்துள்ளார். மாலை வரை அலுவலகத்தில் தனியாக இருந்தார். மதியம் 1 மணியளவில் 2பேர் முருகனை பார்க்க வந்தனர். அவர்கள் 2.30 மணிக்கு சென்றனர். மாலை 4.30 மணியளவில் முருகன் அலுவலகத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டது.

உடனே அந்த கட்டிடத்தில் உள்ள அலுவலகங்களில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தனர். அங்கு முருகன் தலையில் பலத்த வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

தகவலறிந்து துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமிஷனர் கந்தசாமி, மாதவரம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் முருகன் இறந்துவிட்டார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து அந்த வளாகத்தின் ஒரு பகுதிக்கு சென்று நின்றது.

முருகனின் தலையில் 3க்கு மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவரது முகத்தை சிதைக்க முயற்சி நடந்துள்ளது. ஒருவர் மட்டும் இதை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. விசாரணையில், இதே வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் அரசு அனுமதியின்றி கிளப் நடத்தியுள்ளார்.

இதை அந்த கட்டிடத்தில் உள்ள சிலர் போலீசில் தெரிவித்தனர். பின்னர், அந்த கிளப் மூடப்பட்டது. இதனால், அந்த வளாகத்தில் உள்ள சிலருடன் முருகனுக்கு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெரம்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

கொலை சம்பவம் நடந்த பிறகு முருகனின் செல்போன் மாயமாகி உள்ளது. அதை யார் எடுத்து சென்றது, முருகனை எதற்காக கொலை செய்தனர், தொழில் போட்டி காரணமா அல்லது பெண் சம்பந்தமான விஷயமா என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அபிஷேக் பச்சனுடன் இணைகிறார் அசின்!!
Next post கணக்கு புதிரை தீர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம் ..!!