லேடி காகாவின் விரல் நகத்துக்காக $13,000 கொடுத்த ரசிகன் !!(VIDEO)

Read Time:3 Minute, 11 Second

lady gaga hot 4உலகப் புகழ்பெற்ற பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன். தனது பாடலாலும், இசையாலும், நடனத்தாலும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை ஈர்த்தவர். .அவர் தனது வாழ்நாளில் அணிந்த உடைகள், இசை நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் என ஏராளமான பொருட்கள் பெவர்லி ஹில்ஸில் ஏலம் விடப்பட்டன.

அப்போது மைக்கேல் ஜாக்சனின் மேல்சட்டை ஒன்று 2 லட்சத்து 40 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.ஒரு கோடியே 32 லட்சம்) விற்பனையானது. மேலும் வெள்ளை நிற கையுறை ஒரு லட்சத்து 92 ஆயிரம் டாலருக்கு (சுமார் ஒரு கோடியே 5 லட்சம்) விற்கப்பட்டது.இது போன்று மைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை பாப் இசைப்பாடகி காகாதான்,ஏலத்தில் எடுத்தார்.இந்நிலையில் இந்த இசைப்பாடகி லேடி காகா ஒட்டுநகம் ஒன்று 13 ஆயிரம் டாலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ஏழு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்)ஏலம் போயுள்ளது ஹாட் டாபிக்காக பேசப் படுகிறது..

பிரபல பாப் இசைப் பாடகி லேடி காகா மாறுபட்ட உடலமைப்பு, உடையலங்காரங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் கனவுக் கன்னியாக இடம் பிடித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இவர் இசை நிகழ்ச்சி நடத்தியபோது கண்ணைக் கவரும் கருப்பு ஆடை அலங்காரத்துடன் ஒட்டு நகங்களையும் அணிந்து உற்சாகமாக பாடி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். பின்னர் மேடையை விட்டு இறங்கியதும் தனது 10 ஒட்டு நகங்களில் ஒன்று காணாமல் போனது குறித்து கவலையடைந்தார்.

தற்போது அந்த நகம் 12 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போய் உள்ளது. டப்ளனில் லேடி காகா நிகழ்ச்சி நடந்த மேடையை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவர் மேடையில் ஏதோ வினோத பொருள் கிடப்பதை கண்டெடுத்தார்.முதலில்
கிட்டார் வாசிக்க பயன்படுத்தப்படும் ‘ப்ளெக்ட்ரம்’ என்று அதை முதலில் கருதிய அவர், பின்னர் லேடி காகாவின் ஒட்டு நகம் என்பதை அறிந்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து இணையதளத்தின் மூலம் அதை அந்த ஊழியர் ஏலம் விட்டார். லேடி காகாவின் தீவிர ரசிகர் ஒருவர் அந்த ஒட்டு நகத்தை 13ஆயிரம் டாலர்களுக்கு ஏலத்தில் எடுத்தார்.
அது சரி… இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த லேடி காகாவின் பாடலை கேட்க வேண்டுமா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3டி பிரிண்டிங் மூலம் உருவாக்கப்படும் கார்!!
Next post ராம் கோபால் வர்மாவுக்காக லிப்டிலும் இருந்து தோன்றிய ஒரு தேவதை !!