சீனாவில் மாணவிகள் பிரா அணிய தடை: பெற்றோர் கொதிப்பு!!

Read Time:1 Minute, 59 Second

19-1366361876-w-blog-bra-600சீனாவில் 90 லட்சத்து 12 ஆயிரம் மாணவ- மாணவிகள் பல்கலைக்கழகத்தில் சேர 2 நாட்கள் நுழைவு தேர்வு நடந்தது.

அதில் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன பொதுவாக, சீனாவில் நடைபெறும் தேர்வுகளில் மாணவிகளே பெருமளவில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர்கள் மெட்டல் கொக்கிகளால் தயாரிக்கப்பட்ட பிராக்களில் சிறிய வகை செல்போன்கள் போன்றவற்றையும், பிட்களையும் மறைத்து வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே, தேர்வு முறைகேடை தடுக்க இந்த ஆண்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி தேர்வு மையங்களுக்கு வெளியே மெட்டல் டிடெக்டர் வாயில்களில் அமைக்கப்பட்டன. இவை தவிர மெட்டல் டிடெக்டருடன் கண்காணிப்பாளர்களும் இருந்தனர்.

அவர்கள் தேர்வுக்கு வந்த மாணவிகள் மெட்டல் பிராக்கள் அணிந்துள்ளனரா என்பதை கண்டறிய மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதிக்கப்பட்டனர். இதற்கிடையே, ஜிலின் மாகாணத்தில் மெட்டல் கொக்கிகள் மற்றும் பிடிமான வசதிகளுடன் தைக்கப்பட்ட பிராக்களை மாணவிகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்கள் எதிர்ப்பை டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்து தண்டனை!!
Next post என்னவொரு வில்லங்கமான விளையாட்டு … !! (வீடியோ)