போலி மென்பொருள் அடங்கிய கணினிகள் பம்பலப்பிட்டி விற்பனை நிலையத்தில் மீட்பு

Read Time:1 Minute, 16 Second

computerகொழும்பு 04, பம்பலப்பிட்டியவில் பிரசித்தமான கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கணினி விற்பனை நிலையமொன்றை முற்றுகையிட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி மென்பொருட்கள் அடங்கிய கணினிகளை கைப்பற்றியுள்ளனர்.

போலி மென்பொருள் அடங்கிய கணனிகளை விற்பனை செய்பவர்களை கைது செய்ய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டத்துக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட கணினிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

போலி மென்பொருட்கள் அடங்கிய கணினிகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது தொடர்பில் கடந்த காலங்களில் வர்த்தகர்களை தாங்கள் அறிவுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி – இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்
Next post பலாங்கொடை நகரில் 3 கடைகளில் கொள்ளை