இருதார குற்றத்தின் கீழ் மாந்திரீகருக்கு எதிராக வழக்கு

Read Time:2 Minute, 15 Second

question-marksமொரட்டுவையிலுள்ள தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த மாந்திரீகருக்கு எதிராக இருதார வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மாந்திரீகர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையிலேயே அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த சந்தேகநபரான மாந்திரீகர் முதலாவது மனைவியுடன் விவாகரத்து செய்துக் கொள்ளாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பணியகம் எதிராக குற்றஞ் சாட்டியுள்ளது.

இவரது முதல் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பணியகம் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

முறைப்பாட்டை செய்த முதல் மனைவியின் தந்தை, மாந்திரீகர் தனது மகளை மந்திரத்தால் வசியம் செய்து திருமணம் செய்துக் கொண்டதாக குற்றஞ் சாட்டியுள்ளார்.

முறைப்பாட்டாளரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மாந்திரீகரை இருதார குற்றத்தின் கீழ் தண்டிக்க முடியுமென நிரூபிப்பதற்காக இரண்டு திருமண சான்று பத்திரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஆயினும், குற்றஞ் சாட்டப்பட்டவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது கட்சிக்காரர் குற்றத்தை ஒப்புக் கொள்ளப் போவதில்லை எனக்கூறினார்.

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்த நீதவான் திலின கமகே மேற்படி வழக்கை ஜுலை 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகள் மிரட்டல்-
Next post சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி