உலகின் மிகப்பெரிய காற்றுச் சுரங்கம் டுபாயில்

Read Time:2 Minute, 0 Second

1010airஉலகின் மிகப்­பெ­ரிய காற்றுச் சுரங்கம் டுபாயில் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. அமெ­ரிக்­காவில் 15.8 மீற்றர் உய­ரமும், சிங்­கப்­பூரில் 17.2 மீற்றர் உய­ரமும் கொண்ட காற்று சுரங்­கங்கள் ஏற்கெ­னவே உள்­ளன.

டுபாயில் தற்­போது கட்­டப்­பட்­டுள்ள கண்­ணா­டியால் ஆன ”இன்­பிளைட் டுபாய்” காற்றுச் சுரங்கம் 20 மீற்றர் உயரம், 5 மீற்றர் அகலம் கொண்­ட­தாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த மாதம் இது திறக்­கப்­ப­டு­கி­றது.

இது­கு­றித்து, சுரங்க நிலைய பயிற்­சி­யாளர் மேத்யூ ஆடம் காக்னி கூறி­யுள்­ள­தா­வது, இந்த காற்றுச் சுரங்கம் 4 மாடி­களைக் கொண்­ட­தாக இருக்கும். 4 மிகப்­பெ­ரிய மின்­வி­சி­றிகள் சுற்றும். மின்­வி­சி­றிகள் மூலம் உரு­வாகும் காற்று 115 கிலோ எடை கொண்ட பொரு­ளையும் அந்­த­ரத்தில் பறக்க வைக்கும். இந்த மையத்­துக்குள் செல்லும் பார்­வை­யா­ளர்கள் கண்­ணாடி கோபு­ரத்தின் உள்ளே பறந்து மகி­ழலாம்.

சுமார் 3,650 மீற்றர் உய­ரத்தில் பறக்கும் விமா­னத்­தி­லி­ருந்து கீழே குதித்தால் காற்று விசை எப்­படி இருக்­குமோ, அந்த அள­வுக்கு காற்று சக்­தியை உணர முடியும். பறக்­கும்­போது வெளி­யி­டங்­களை பார்க்க முடி­யாது. ஆனால் வானத்­தி­லி­ருந்து விழும் உணர்வை பெற முடியும். தரையில் விழுந்து காயம் ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி
Next post ‘மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல்’ அழகுராணியாக இலங்கையின் நிலு சேனநாயக்க தெரிவு