‘மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல்’ அழகுராணியாக இலங்கையின் நிலு சேனநாயக்க தெரிவு

Read Time:2 Minute, 49 Second

1011_newsthumb_thum“மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் 2013″ அழகுராணியாக இலங்கையரான நிலங்கா சேனாநாயக்க தெரிவாகியுள்ளார்.

திருமணமான பெண்களுக்கான “மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் 2013″ (Mrs Asia International 2013”) அழகுராணி போட்டி மலேஷியாவில் நடைபெற்றது. இறுதிச்சுற்று கோலாம்பூர் நகரில் கடந்த ஞாயின்று இரவு நடைபெற்றது.

30 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்குபற்றிய இப்போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க மிசஸ் ஆசியா 2013 அழகுராணியாக தெரிவாகியுள்ளார். இப்போட்டிகளில் Best Model Look’ பட்டத்தையும் அவர் வென்றார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 32 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள நிலங்கா சேனாநாயக்க, அழகுக் கலை நிபுணரும் மொடல் அழகியுமாவார்.

நிலு சேனாநாயக்க என அழைக்கப்படும் அவர், தனது சொந்த ஊரான களுத்துறையில் “சலூன் நிலு” எனும் அழகு நிலையமொன்றையும் நடத்தி வருகிறார்.

365 Event Management நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அர்ஜுன சேனாநாயக்கவை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலு சேனாநாயக்க இரு பிள்ளைகளின் தாயாவார். இம்முறை மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் போட்டிகளில் பங்குபற்றிய பெண்களின் கணவர்களுக்கான சிறந்த ஆதவரளிக்கும் கணவர் (Best Supporting Husband) போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் போட்டிகளில் இலங்கைக்கு தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக அழகுராணி விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த வருடம் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலி பொன்சேகா, மிசஸ் ஏசியாஇன்டர்நெஷனல் குளோப் அழகுராணியாக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் ஸ்ரீமாலி பொன்சேகா சகிதம் இலங்கைக்கு திரும்பிய நிலு சேனாநாயக்கவை அவரின் குடும்பத்தினர், பிரபல பெஷன் மற்றும் மொடலிங் பயிற்சி நிறுவனமான “வீ அக்கடமி”யின் பணிப்பாளரும் பிரபல மொடல் அழகியுமான வாசனா தந்தநாராயண ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிகப்பெரிய காற்றுச் சுரங்கம் டுபாயில்
Next post 5 வயது ‘ஒன்றுவிட்ட’ தங்கையை ‘குத்துவிட்டு’ கொன்ற 13 வயது சிறுவன்