மூன்று மனைவியரும் பொறுப்பேற்காத கணவனின் சடலம் அரச செலவில் அடக்கம்

Read Time:2 Minute, 59 Second

questioமாரடைப்பினால் மரணமான கணவரின் சடலத்தை பொறுப்பேற்க மூன்று மனைவிமாரும் முடியாது என நிராகரித்ததால் அவரின் சடலம் அரசாங்க செலவில் அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்ட சம்பவம் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

முறைப்படி மணந்த மனைவி குழந்தைகளுடன் உயிரோடு இருக்கையில் அவருக்கு தெரியாமல் வேறு இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்திய நபரொருவர் திடீரென மாரடைப்பினால் மரணமானார்.

இவரின் இறுதி கிரியைகளுக்காக அவரது உடலைப் பொறுப்பேற்க மூன்று மனைவிமார்களும் மறுத்து விட்டனர். இச்சம்பவம் 20ஆம் திகதி கொழும்பு பெரியாஸ்பத்திரியில் நிகழ்ந்துள்ளது.

கட்டட நிர்மாண பொறியியலாளரான இவருக்கு வயது 56. கம்பஹாவை வசிப்பிடமாக கொண்ட இவர் தொழில் விடயமாக அடிக்கடி கொழும்பு மற்றும் காலி ஆகிய வெளிப் பிரதேசங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பிட்ட மூன்று இடங்களிலும், இவருக்கு மூன்று மனைவிமார்கள் இருந்தனர்.

கம்பஹாவில் வசித்த சொந்த மனைவிக்கு ஐந்து குழந்தைகளும், காலி மனைவிக்கு நான்கு பெண் குழந்தைகளும் கொழும்பில் வசிக்கும் மனைவிக்கு இரு குழந்தைகளும் இருந்தனர்.

கடந்த வாரம் கொழும்பு மனைவியின் வீட்டிலிருந்த போது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு எடுத்து சென்ற வழியிலேயே இவரது உயிர் பிரிந்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பு மா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி எட்வட் அஹங்கம முன்னிலையில் நடைபெற்ற மரண விசாரணையின் போது மூன்று மனைவிமார்களும் அழைக்கப்பட்டனர். இவர்களின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.

சட்டப்படி மணந்த முதல் மனைவிற்கே இவரது சடலத்தை ஏற்றுக் கொள்ள உரிமையுள்ளது என மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

அப்பொழுது முதல் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஏனைய மனைவிமார்கள் இருவரும் இவ்வாறே கூறிவிட்டு நழுவி விட்டனர்.

இவரது சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு விசாரணையின் இறுதியில் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் அப்பாவி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த சம்பவம்
Next post இந்தியா- இலங்கை போட்டியின் போது புலிக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தவர்கள் கைது