அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு -நடிகை ஏஞ்சலீனா வலியுறுத்தல்

Read Time:2 Minute, 15 Second

Jolie(C)சர்வதேச அகதிகள் தினம் நேற்றுமுன்தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபை மனித உரிமை குழுவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி(38) ஜோர்டான் அகதிகள் முகாமில் உள்ள அகதிகளைச் சந்தித்தார்.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் லட்சக்கணக்கான சிரிய மக்கள் துருக்கி, லெபனான், ஜோர்டான் போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு ஐ.நா.சபையின் மனித உரிமை குழுவின் சிறப்பு தூதர் ஏஞ்சலினா ஜோலி, ஜோர்டனில் உள்ள சிரியா அகதிகள் முகாமுக்கு சென்றிருந்தார். அங்குள்ள அகதிகளைச் சந்தித்து அவர்களின் குறை, நிறைகளைக் கேட்டறிந்துள்ளார்.

அப்போது பேசிய ஏஞ்சலீனா, 21 ம் நூற்றாண்டின் மிக மோசமான பேரழிவும், மனிதநேய மீறலும் சிரியாவில் நடைபெற்று வருகிறது. இவ்வளவு பெரிய பேரழிவிற்கு சர்வதேச சமுதாயம் அளித்து வரும் நிவாரணம் மிகவும் சொற்பமாக உள்ளது.

மனித நேய அடிப்படையிலான மேலும் பல உதவிகள் தேவைப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பிரச்சனைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்ற மாதத்தில், புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளானதால் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் நடிகை ஏஞ்சலினா ஜோலி. ஆனபோதும், ஓய்வில் இல்லாமல் அகதிகளைச் சந்திப்பதற்காக அவர் ஜோர்டான் சென்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய் பிள்ளையை பாம்புகளோடு அடைத்து வைத்து சித்திரவதை
Next post யாழ்ப்பாணத்தில் 40 அடி மனிதனின் பாதச்சுவடு கண்டுபிடிப்பு