டி ஆரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத முமைத்கான் !!

Read Time:1 Minute, 59 Second

mumaithஇத்தனை வயசிலும் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடுவதென்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் டி.ராஜேந்தர் போட்ட குத்தில், பத்தில் ஒரு பங்கு கூட போடவில்லையாம் முமைத்கான். அப்புறம்? ‘ஐயா சாமிய்… ஆளை விடுங்க’ என்று மும்பைக்கே ஓடிவிட்டாராம்.

கோடம்பாக்கத்தில் சுட சுட பேசப்படும் ஒரே விஷயம் டி.ராஜேந்தர் முமைத்கானை விரட்டிய இந்த விஷயம்தான். இராம.நாராயணன் இயக்குகிற ஆர்யா சூர்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் டி.ஆர். இந்த பாடலை இவரே இயற்றி இசையமைத்து பாடி ஆடியும் இருக்கிறார் என்பதுதான் ஹைலைட்!

கடந்த சில நாட்களாக டி.ஆர் கார்டனில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் முதல் ஜபர்தஸ்தாக வந்து கலந்து கொண்டார் முமைத்கான். இவரும் டிஆரும் சேர்ந்து ஆடுவது போல கம்போஸ் பண்ணியிருந்தார் மாஸ்டர். இதில் பம்பரமாக சுழன்று ஆடிய டி.ஆர், ஏய்… இந்தா இந்தா… என்று போட்டுத்தாக்க, மயக்கமே வந்துவிட்டதாம் முமைத்துக்கு.

அன்று மாலை பேக்கப்புக்கு பின், ரூமிற்கு திரும்பிய முமைத், சொல்லிக் கொள்ளாமல் பிளைட் பிடித்து கிளம்பிவிட்டாராம். ‘அவ போனா போகட்டும். ஆடத் தெரிஞ்சவளை கொண்டாங்கய்யா’ என்று சலம்பி விட்டு, வரப்போகிற பம்பரத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறார் டி.ஆர்.
யாருக்கு கொடுத்து வச்சுருக்கோ?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரிய இடத்திற்கு ஆசைப்படலாம் .. சிலருக்கு மட்டுமே அதிஷ்டம் அடிக்கும் !!
Next post மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர கணவன்!!