வரும் செப்டெம்பரில் ராஜா ராணி ரிலீஸ் !!

Read Time:3 Minute, 57 Second

998263_523098487755349_35872928_n (1)வெளிவர இருக்கும் படங்களில் மிகவும் பிரகாசிக்க கூடியவர் என திரை உலகின் வல்லுனர்கள் கணிக்கும் இளம் இயக்குனரான அட்லீ இயக்கும் படம் ‘ராஜா ராணி’. இந்தக் கதையாக இருக்குமா இல்ல அந்தக் கதையாக இருக்குமா என்று எல்லோரையும் யூகிக்க வைக்கும் கதை அமைப்பு ஆகட்டும், பிரமிக்க வைத்த ஆர்யா-நயன்தாரா ‘திருமணம்’ பற்றிய விளம்பரம் ஆகட்டும், அந்தவகையில் ‘ராஜா ராணி’ படம் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து தன்னைப் பற்றியும், தான் இயக்கிவரும் படம் பற்றியும் மனம் திறக்கிறார் அட்லீ. ‘இது ஒரு முழுக்க முழுக்க ஒரு ஜனரஞ்சகமான குடும்பச் சித்திரம். திருமணத்துக்கு பிந்தைய ஒரு இனிமையான கால கட்டத்தைப் பற்றிய படமாகும். இன்றைய இளைஞர்கள் திருமண உறவு என்றாலே எட்டிக்காயாய் பாவிக்கும் மன நிலையை மாற்றும் படமாக இருக்கும் என்கிறார்.

ஆர்யாவும், நயன்தாராவும் நடிக்காமல், அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்குள் திரையைத் தாண்டிய ஒரு உறவு பட்டவர்த்தனமாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வது ஆகட்டும், உதவிக் கொள்வது ஆகட்டும், வாஞ்சையுடன் அழைப்பது ஆகட்டும் அருமை!

அந்த வகையில் என்னுடைய விளம்பர யுக்திக்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு சூப்பர்! இந்தப் படத்தின் கதையைப் பற்றி வந்த சர்ச்சைகள் என்னைக் காயப் படுத்தினாலும், பின்னர் என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நல்ல தரமான படம் கொடுப்பதே. அதை இதற்கான மருந்து என நினைத்து உழைக்க ஆரம்பித்து விட்டேன். ஷங்கர் சாரின் பாசறையில் பயின்றவன் என்ற பெருமை எனக்கு என்றும் உரியது. ஒரு தந்தையுடனான உறவு எனக்கு அவரிடத்தில் என்றும் உண்டு. முருகதாஸ் சார் அவர்களையும், என்னால் மறக்க முடியாது.

கதையைக் கேட்ட உடனே எனக்கு அட்வான்ஸ் கொடுத்து படம் பண்ணலாம் என்ற அவர், என் மீது வைத்த நம்பிக்கையை நான் என்றென்றும் மறவேன். ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு நான் படம் செய்யும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.

அதேபோல் என்னுடைய ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருவரும் இப்படத்தின் முக்கியத் தூண்கள். நான் இப்படத்தின் நடிகர்கள் பட்டியலை வாசித்தால், இது எவ்வளவு பெரிய படம் எனத் தெரிய வரும். ஆர்யா, ஜெய், சத்யராஜ், சந்தானம், சத்யன், நயன்தாரா மற்றும் இன்றைய சென்ஷேசன் நஸ்ரியா நசீம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் இசையை வெளியிட்டவுடன், செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள இப்படம் நிச்சயம் இளைஞர்களைக் கவரும் எனக் கூறுகிறார் அட்லீ.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காற்சட்டையை கழற்றிவிட்டு காற்று வாங்கும் அமெரிக்க மொடல்!!(PHOTOS)
Next post சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்…: சிங்காரச் சென்னை விபத்துக்களின் நகரமா?(PHOTOS)