இங்கிலாந்தில் தன்னைத்தானே சுற்றும் சிலை!!

Read Time:1 Minute, 57 Second

bb5c721c-9789-4a25-be53-47e2dc7cafea_S_secvpfஇங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உலகப் புகழ் பெற்ற மியூசியம் உள்ளது. இங்கு 4 ஆயிரம் ஆண்டு பழமை மிக்க நெப்-சேனு என்பவரின் ‘மம்மி’ சிலை உள்ளது. கி.மு. 1800ல் வாழ்ந்ததாக கருதப்படும் நெப்-சேனுவின் இந்த 10 அடி உயர சிலை கடந்த 80 ஆண்டுகளாக மான்செஸ்டர் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தொன்மையான எகிப்து கால கலாசார நம்பிக்கையின்படி, ‘மம்மி’ எனப்படும் முதுமக்கள் தாழியில் இருக்கும் பொருட்களை கவர்ந்து செல்பவர்கள் கொடும் சாபத்திற்கு ஆளாவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையின் மீது வேறுபட்ட கருத்துகள் நிலவி வந்தாலும் மம்மிகளின் சாபம் உண்மையாக இருக்குமோ..? என ஐயப்படும் வகையில் நெப்-சேனு சிலை தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

நின்ற நிலையில் உள்ள இந்த 10 மடி சிலை யாருடைய உதவியும் இல்லாமல் சில நேரங்களில் தன்னிச்சையாக 180 டிகிரி வரை திரும்பி நின்று அதிசயத்தை ஏற்படுத்துகிறது. இந்த அதிசய காட்சி, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. நெபு-சேனுவின் சிலை யாருடைய தூண்டுதலுமின்றி தன்னைத்தானே சுற்றி வரும் மர்மம் என்ன? என்ற அறிவியல் விளக்கத்திற்கு விடை தேடும் முயற்சியில் தற்போது ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவரது வயதோ 16..உருவமோ 60, வினோத நோயால் அவதி!!
Next post நயன்தாராவுக்கு உண்மையில் பெரிய மனசுதான் !!(VIDEO)