சம்பந்தன், விஜித்த ஹேரத்தின் ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
Read Time:1 Minute, 25 Second
நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்காக சட்டமா அதிபரினால் கோரப்பட்ட விசேட அனுமதிக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் ஆட்சேபனையை முன்வைத்திருந்தனர்.
அந்த ஆட்சேபனையை, ஐந்து நீதியரசர்கள் கொண்ட நீதியரசர் குழாமே இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
முன்னாள் பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றம் அறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு செய்ய வேண்டுமென சட்டமா அதிபர் விசேட மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
Average Rating