ரஷ்ய ரொக்கெட் ஏவுகையில் வெடிப்பு!!

Read Time:2 Minute, 42 Second

1133rusஆளில்லா ரஷ்­யாவின் ரொக்கெட் ஒன்று 3 செயற்­கை­கோள்­க­ளுடன் கஸ­கஸ்­தானில் வைத்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏவு­கையில் நச்சு எரி வாயுவை வெளி­யிட்­ட­வாறு வெடித்துச் சித­றி­யுள்­ளது. ரஷ்­யா­வுக்குச் சொந்­த­மான ஆளில்லா ரொக்­கெட், கஸ­கஸ்­தானில் அமைந்­துள்ள ரஷ்ய ரொக்கெட் ஏவு­த­ளத்தில் வைத்து காலை 8.38 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இதன் போதே சற்றும் எதிர்­பா­ராத வித­மாக ரொக்கெட் வெடித்­துள்­ளது.

குறித்த ரொக்கெட் வெடித்துச் சித­றி­யதில் ஏவு­தளம் முழு­வதும் நெருப்­பினால் மூடப்­பட்­டுள்­ளது. இக்­காட்­சி­யினை அந்­நாட்டு ஊட­க­மொன்று வெளி­யிட்­டுள்­ளது. ஆனால் இவ்­வி­பத்­தினால் ஏற்­பட்ட சேத விப­ரங்கள் குறித்து அதி­கா­ர­பூர்வ தக­வல்கள் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் ரொக்கெட் ஏவப்­படும் போது பல ஏவு­தள பணி­யா­ளர்கள் நிலத்தின் கீழுள்ள பதுங்கு அறையில் இருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை ரஷ்­யாவின் ஆரம்­ப­கட்ட மதிப்­பீட்­டின்­படி இந்த விபத்தில் ஏவு­த­ளத்­திற்கு பாதிப்­புக்­களோ அல்­லது உயி­ரி­ழப்­புக்­களோ ஏற்­ப­ட­வில்லை என கஸ­கஸ்­தானின் விண்­வெளி நிலையம் தெரி­வித்­துள்­ளது. மேற்­படி ரொக்கெட் வெடிப்பின் போது உயர்­ரக நச்சு எரி­பொருள் எரிந்­துள்­ள­மை­யினால், பைக்­கனூர் நகரில் அமைந்­துள்ள குறித்த ஏவு­த­ளத்தைச் சுற்­றி­யுள்ள மக்­களின் சுகா­தா­ரத்­திற்கு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் கார­ண­மாக அவர்­களை அங்­கி­ருந்து வெளி­யேற்றும் நட­வ­டிக்­கை­களை கஸ­கஸ்தான் அவ­ச­ர­கால அதி­கா­ரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ரொக்கெட் விபத்­தினால் ரஷ்­யா­வுக்கு சுமார் 200 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரை இழப்­புக்கள் ஏற்­பட்­டி­ருக்­கலாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிலைக்குள் என்னப்பா சில்மிஷம் ?? (வீடியோ)
Next post மாணவனைக் காணவில்லையென முறைப்பாடு!!