இந்தியாவின் முன்னால் மண்டியிட தேவையில்லை -ராஜீவ் காந்தியை அடித்த விஜேமுனி

Read Time:2 Minute, 2 Second

vijitha-rohanaஇலங்கை முப்பது ஆண்டுகால போரை வெற்றிக் கொண்டுள்ளதால், இந்தியாவின் முன்னால் மண்டியிடும் தேவையில்லை என இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படைவீரரான விஜித ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை – இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை வந்திருந்த போது, வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையின் போது, ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கிய முன்னாள் கடற்படை வீரரான விஜேமுனி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மாகாண சபை முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும், மாகாண சபையை ஏற்படுத்தியவர்களில் எவரும் தற்போது உயிருடன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தேர்தல் நடத்தப்பட மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட போது, நோர்வே, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகள் ஈழ கோட்பாட்டை அங்கீகரித்தன. இந்நிலையில், 15க்கும் மேற்பட்ட நாடுகள் அதனை அங்கீகரித்தால், ஆபத்தான நிலைமை ஏற்படும்.

வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதன் காரணமாகவே இந்தியா, இலங்கையில் தலையிட்டு மாகாண சபைகளை ஏற்படுத்தியது என விஜேமுனி மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் விலைமாதுகளுடன் அல் கொய்தா தலைவர் உல்லாசம்!!
Next post பொலிவிய ஜனாதிபதியின் விமானம் சோதனையிடப்பட்டமைக்கு தென் அமெரிக்க நாடுகள் கண்டனம்