சுரேஷ் எம்.பியின் பிக்கப் வாகனம் மோதி இரு இளைஞர்கள் படுகாயம்..!!

Read Time:1 Minute, 30 Second

images (3)யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்ற பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.  இந்த விபத்து நேற்றுப் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் வடமராட்சியில் இடம் பெற்றுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இருந்து வல்வெட்டித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுரேஷ் எம்.பி யின் பிக்கப் வாகனமும் வல்வை யிலிருந்து தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வீதியில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியது.  இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புலோலி மேற்கு கருகம்பனைச் சேர்ந்த அருளானந்தம் விபுலானந்தன் (வயது 24) மந்திகையைச் சேர்ந்த கிட்டிணப்பிள்ளை திருசாந்தன் ஆகியோர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த விபத்துக் குறித்து வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னறனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருதானையில் இன்று முதல் புதிய போக்குவரத்து முறை..!!
Next post தென் ஆபரிக்க தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.!!