வர்ணப் பூச்சுகளால் மாத்திரம் உடலை மறைப்பதற்கு எதிராக அமெரிக்க நகரில் அவசர சட்டத் திருத்தம்..!!
Read Time:1 Minute, 57 Second
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள லூவிஸ்வில்லே நகரில் இடுப்புக்கு மேல் பொடி பெயின்டிங் எனும் வர்ணப்பூச்சுகளை மாத்திரம் பூசிக்கொண்டு பொது இடத்தில் தோன்றுவதை தடைசெய்யும் வகையில் அவசர சட்டத்திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள உணவு விடுதியொன்றில் பணியாற்றும் இளம் பெண் ஊழியர்கள் இடுப்புக்கு மேல் ஆடை எதுவும் அணியாமல் வர்ணப்பூச்சுகளினால் மாத்திரம் உடலை அலங்கரித்துக்கொண்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி வந்தமையே இதற்குக் காரணமாகும்.
இந்த உணவு விடுதி குறித்து பொதுமக்கள் பலர் நகர நிர்வாகிகளுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. தமது ஊழியர்கள் நிர்வாணமாக தோன்றவில்லை எனவும் வர்ணப்பூச்சு மூலம் உடலை மறைத்துகொண்டுதான் இருந்தார்கள் எனவும் உணவு விடுதியின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து, பொது இடங்களில் நிர்வாணமாக தோன்றுவதற்கு எதிராக சட்டத்தில் அவசர திருத்தம்செய்ய நகர அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
வர்ணப்பூச்சுகளால் மாத்திரம் உடலை மறைத்துக்கொண்டு பொது இடங்களில் இனி தோன்ற முடியாது எனவும் முறையான ஆடை அணிந்திருக்க வேண்டும் எனவும் அந்நகரின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating