8 பேக் உடற்கட்டுடன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் ‘ஆதவன்’

Read Time:3 Minute, 24 Second

images (12)‘ஆஸ்மி பிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சிராஜுதீன் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் சினிமாஸ் வழங்கும் படம் ‘மின்னல்’. இந்த படத்தில் ‘ஆதவன்’ என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை சிராஜ் இயக்குகிறார். விமல் ஜேக்கப் இசையமைக்கிறார்.

இதுவரை இந்திய சினிமாவில் 6 பேக் உடற்கட்டுடன் உலாவந்த நாயகர்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தின் நாயகன் ஆதவன் மேலும் இரண்டு பேக் ஏற்றி, 8 பேக் உடற்கட்டுடன் அறிமுகமாகிறார். படத்தின் இறுதிக்காட்சியில் வரும் சண்டைக் காட்சிக்காக தனது உடம்பை இப்படி மாற்றியிருக்கிறாராம்.

‘இந்தியாவிலேயே முதல் படத்தில் 8 பேக் உடற்கட்டுடன் அறிமுகமாகும் நாயகன்’ என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். இதற்காக 106 நாட்கள் கடுமையான பயிற்சியை தினமும் 8 மணி நேரம் செய்ததுடன், கடைசி 5 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் பயிற்சி செய்து 8 பேக் உடற்கட்டை கொண்டு வந்தாராம்.

கதாநாயகியாக அங்கனா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நவ்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அபிநய் நடிக்கிறார். வில்லனாக மகி நடிக்கிறார். முக்கிய வில்லன் வேடத்தில் பாலாபட், எஸ்.டி. சாமி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீடு சென்னை பிரசாத் லேப்பில் இன்று நடந்தது. இதில் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், வி.சேகர், தயாரிப்பு சங்க நிர்வாகி ராஜன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். விக்ரமன் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, சூப்பர் ஸ்டார் சினிமாஸ் என்று தயாரிப்பு நிறுவனம் துவங்கி அதன் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். சூப்பர் ஸ்டாரை வைத்து நிறைய படங்கள் எடுத்தவன் என்ற முறையில் என்னை இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் போல் இந்த படத்தின் நாயகன் ஆதவனும் பெரிய நிலைக்கு வரவேண்டும் என வாழ்த்தினார்.

மேலும், விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த அனைவரும், படத்தின் டிரைலர் குறித்தும், நாயகன் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தியும் பேசினர். முடிவில் இயக்குனர் சிராஜ் நன்றியுரை ஆற்றினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விடயம், நால்வர் கைது..!!
Next post மனைவியின் தோழியை வல்லுறவுக்குபடுத்திய நபர்..!!