லிப் டூ லிப் ட்ரீட்மெண்ட் கொடுத்து நாயைக் காப்பாற்றிய ஹீரோ..!!

Read Time:2 Minute, 44 Second

17-eyes-dog-600ரோட்டில் மனிதர்களே அடிபட்டுக் கிடந்தாலும் கண்டு கொள்ளாமல் செல்லும் இந்தக் காலத்தில், விபத்தொன்றில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நாயொன்றைக் காப்பாற்றி மக்கள் மனதில் ஹீரோ ஆகியிருக்கிறார் ஒருவர்.

ஆஸ்திரேலியாவின் பல்லாரட் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீவ் ஹண்டர். இவர் ஒருநாள் வேலை விஷயமாக சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, நாயொன்று விபத்ஹ்டில் சிக்கி உஇருக்கு போராடுவதைக் கண்டுள்ளார்.

நாய் தானே என அனைவரும் அலட்சியமாக சென்று கொண்டிருக்கையில், ஸ்டீவ் தடாலடியாக நாயின் அருகே சென்று அதன் நிலைமையைப் பார்த்துள்ளார்.

உடனடியாக, மனிதர்களின் இதயம் நின்று விட்டால் செய்யக்கூடிய சி.பி.ஆர். எனப்படும் முதலுதவி சிகிச்சையை செய்யத் தொடங்கினார் ஸ்டீவ்.

மவுத் டூ மவுத் ட்ரீட்மெண்ட்…
நாயின் தாடையை பிடித்து, வாயை அகலமாக விரித்து, தனது வாயை நாயின் தொண்டை அருகே கொண்டுச் சென்று செயற்கை சுவாசம் அளித்தபடி, அதன் மார்பு பகுதியை லேசாக கையால் குத்தி மீண்டும் நாயிற்கு சுவாசம் வர உதவியுள்ளார் ஸ்டீவ்.

பின்னர், அந்நாயை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனையில் சேர்த்து, அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சால்ட்டி ரொம்ப நாட்டி…
பின்னர், தலையில் ஏற்பட்ட காயத்துக்காகவும், இடுப்பு மற்றும் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்ட ‘சால்ட்டி’ என்னும் அந்த நாய் உரிமையாளரிடம் ஒப்படைத்தார் ஸ்டீவ்.

பல்லு விலக்குனயா..?
மனித நேயத்தோடு செயல் பட்டதால், அப்பகுதி மக்களின் மனதிக் ஹீரோவாக உயர்ந்து விட்ட ஸ்டீவ்வின் மனதில், ‘நாயின் வாயோடு வாய் வைக்கும் போது ‘இது பல்லு விலக்கிருக்காதே’ என்ற எண்ணத்தை தவிர வேறு எந்தத் தயக்கமும் உருவாகவில்லையாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நானும் குண்டாக போறேன்இலியானா அறிவிப்பு..!!
Next post ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் தங்கம்: துபாய் அரசின் புது ‘எடைக்குறைப்புத்’ திட்டம்..!!