அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான சிரியா அதிகாரி லெபனானில் சுட்டுக்கொலை..!!

Read Time:2 Minute, 15 Second

download (6)சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிபர் ஆசாத்தை எதிர்த்து அல்சஹாப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். அண்டை நாடான லெபனானில் உள்ள ஷியா பிரிவினரான ஹெஸ்பொல்லா தீவிரவாதிகள் அதே பிரிவைச் சேர்ந்த ஆசாத்தின் படைக்குத் துணையாக புரட்சியாளர்களை எதிர்த்து வருகின்றனர்.
இதனால், சிரியாவின் உள்நாட்டுக் கலவரம் தங்கள் நாட்டையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் லெபனான் தலைவர்களுக்கு எழுந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை லெபனானில் சிரியா நாட்டு அதிகாரி முகமது தரார் ஜமோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிரியா அதிபர் ஆசாத்தின் ஆதரவாளரான முகமது தரார் ஜமோ, சிரியா நாட்டு அரசியலில் செல்வாக்கு படைத்தவராகவும், அரபு நாடுகளில் குடியேறும் சர்வதேச மக்கள் அமைப்பின் சர்வதேச உறவுகள் பிரிவிலும் இயங்கி வந்தார். மேலும், அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக இவர் பலமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். இவர் நேற்று காலை லெபனானில் உள்ள தனது வீட்டிற்குள் நுழையும்போது ஆயுதமேந்திய அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் இருந்த அவரது மனைவியை அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்த சம்பவம் சிரியாவின் பிரச்சினைகள் லெபனானின் இயல்பு நிலையையும் சீர்குலைக்க ஆரம்பித்துள்ளது என்பதனைக் காட்டுகின்றது. சிரியாவில் போரிடும் இரு தரப்பினரையும் ஆதரிக்கும் குழுக்களிடையே லெபனானில் கலவரங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளவரசி டயானா வேடத்தில் நடிகை நயோமி..!!
Next post இசை நிறுவனங்கள் ‘ராயல்டி’ தருவதில்லை: ஜி.வி.பிரகாஷ் வேதனை..!!