2ஆம் உலக யுத்த பீரங்கிகளால் உருவாக்கப்பட்ட ஜிம்..!!
Read Time:2 Minute, 24 Second
2ஆம் உலக மகா யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளிலிருந்து ஜிம் உபகரணங்கள் உருவாக்கப்பட்டு அதனைக்கொண்டு திறந்த வெளி உடற்பயிற்சி நிலையம் (ஜிம்) ஒன்றினை உக்ரைனைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
இலவசமாக பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதிக்கும் இந்த உடற்பியற்சி நிலையம் அதுவும் வரலாற்று முக்கியத்துவமிக்க பொருட்களை கையாளும் வாய்ப்பு என்றால் அதிகளவிலான மக்களை உடற்பயிற்சியின் பக்கம் ஈர்க்கலாம் எனும் யூரி குக் என்ற பொறியியலாளரின் சிந்தனையிலேயே இவ்வாறானதொரு ‘ஜிம் ‘அமைக்கப்பட்டுள்ளது.உக்ரைனின் கீவ் நகரில் 6.2 சதுர மைல் நிலப்பரப்பிலேயே மேற்படி திறந்தவெளி ஜிம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிம்மில் 2ஆம் உலக மகா யுத்தத்தில் ரஷ்யா பயன்படுத்திய பீரங்கியிலிருந்து மாத்திரமல்லாமல் 1970 ஆண்டு காலப்பகுதியில் பயன்படுத்தி பாவனைக்குதவாது என விலக்கப்பட்ட சாதனங்கள் பலவற்றிலிருந்தும் பஞ்சிங் பேக், இருக்கைகள் என 200 இற்கும் அதிகமான ஜிம் சாதனங்களை யூரி குக் உருவாக்கியுள்ளார்.
திறந்த வெளியில் உள்ளமையினால் திருட்டினைத் தவிர்க்க இரும்புச்சங்கிலிகளால் சாதனங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னார்வத் தொண்டர்கள் சிலர் இந்த ஜிம்மை முறையாகப் பராமரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இந்த ஜிம்மில் ஏராளமான மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating