By 23 July 2013 0 Comments

சூர்யாவின் 38 ஆவது பிறந்த தினம்..!

imagesநடிகர் சூர்யா இன்று 38 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். 23-07-.1975 ஆம் திகதி பிறந்த சரவணன் சிவகுமார் 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் மூலம் நடிகர் சூர்யாவாக அறிமுகமானார்.

காக்க காக்க, பிதாமகன், பேரழகன், கஜினி, 7 ஆம் அறிவு, சிங்கம், சிங்கம் 2 உட்பட சூர்யாவின் பல திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருது, சிறந்த தமிழ் திரைப்பட நடிகருக்கான விருது உட்பட பல விருதுகளை சூர்யா வென்றுள்ளார்.

தன்னுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்த சூர்யா இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

சமூக சேவைகளில் ஆர்வம் செலுத்தும் நடிகர் சூர்யா, ‘அகரம்’ எனும் பெயரில் லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam