மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும்! சம்பந்தனுக்கு எதிராக சுவரொட்டி..!!

Read Time:1 Minute, 47 Second

download (7)தமிழரசு கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவும், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி என்ற பெயரில் பரவலாக சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உண்ணாவிரதம், மறியலுக்கு மாவை அண்ணன், மகுடம் சூடுவது விக்னேஸ்வரனா? சகுனி தொடங்கியது பாஞ்சாலியை வைத்து, சம்பந்தன் தொடங்குவது விக்னேஸ்வரனை வைத்தா?

சம்மந்தன் அய்யா சகலதும் தெரிந்த நீங்கள் சடுதியில் மாறியது ஏன்? சந்தி சிரிக்க வைக்க பெற்ற தொகை எவ்வளவு? மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் போன்ற வாசகங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை, கிளிநொச்சியிலும் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி என்னும் பெயரில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பசியில் இருந்த போதும் சிறையில் இருந்தபோதும் எமக்காய் உருகிய மாவை அண்ணனை எப்படி மறப்போம்?

சம்மந்தன் அய்யா உங்கள் முதலமைச்சருக்கு கோணாவிலும் கோப்பாபுலவும் எங்குள்ளது என்று தெரியுமா? நாங்கள் துன்பப்பட்ட போது விக்கினேஸ்வரன் அய்யா எங்க போனவர்?

போன்ற வாசங்கள் காணப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையின் கை வடிவில் முளைத்த முள்ளங்கி..!
Next post புருஷனை ஏமாற்றுவதில்..அமெரிக்கப் பெண்கள்தான் கில்லாடிகளாம்..?