ஸ்பெயின் ரயில் விபத்துக்கு காரணமான சாரதி கைது..!!

Read Time:2 Minute, 18 Second

train Driverஸ்பெய்னில் 80 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணமான சாரதி இன்று முறையாக ஸ்பெயின் நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட வேகத்தினை விட சுமார் இரு மடங்கு அதிக வேகத்தில் பயணித்து கட்டுப்பாட்டை இழந்துள்ளார் சாரதி.
இதனால் ரயில் தடம்புரண்டு 80 பலியாகவும் 141 பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் பிரான்சிஸ்கோ ஜோஸ் கர்சொன் என்ற ரயில் சாரதியே அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவராவார்.
இவ்விபத்துச் சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு சன்டியகோ ரயில் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றது. குறித்த ரயில மெட்ரிட் நகரிலிருந்து பெர்ரோல் நகருக்கு பயணித்துள்ளது.
இதில் 218 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோ கிறிஸ்தவ ஆலய திருவிழாவிற்கு சென்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிக்கிய ரயிலியிலிருந்த கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களில் சடலங்களை அடையாளம் பணியையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ரயிலை நான் தடம்புரளச் செய்தேன். நான் இறக்கவேண்டும் என ரயில் சாரதி பிரான்சிஸ்கோ, ரயில் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை பிரான்சிஸ்கோ ரயிலில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். இதன்போது ரயில் வேகமானியை படம்பிடித்து அதனை கடந்த வருடம் மார்ச் மாதம் பேஸ்புக்கில் தரவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

train Driver

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருட வந்தவர் வீட்டில் உறங்கிய சம்பவம்..!!
Next post நெருப்புக்குள் இருந்தவாறு மஜிக் (VIDEO)