ஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம்..!!

Read Time:1 Minute, 59 Second

1whaleasadபாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கடல் வாழ் உயிரினம் எது என்பது தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படையினரே இதனை முதன் முதலாக கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் குறித்த உயிரினத்தின் படங்கள் ஈரானிய இணையத்தளமொன்றில் வெளியாகியது.

அதன்பின்னரே இது என்ன உயிரினமாக இருக்குமென விவாதம் தொடங்கியது.

பலர் இது ஒரு வகை திமிங்கிலமே எனத் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களும் இதனையே தெரிவிக்கின்றனர்.

ஆனால் திமிங்கிலத்தின் எப்பிரிவைச் சார்ந்தது என்பதை உறுதியாகக் கூற முடியாமல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலில் இத்தகைய மர்ம விலங்குகள் கண்டுபிடிக்கப்படுவதும், கரையொதுங்குவது இது முதன் முறையல்ல.

நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கரையொதுங்கியது.

அழுகிய நிலையில் உள்ள குறித்த உயினமானது 30 அடி நீளமானதென தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் சீனாவின் குவாண்டொங் கடற்கரைப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு இராட்சத உயிரினமொன்று கரை ஒதுங்கியது. இது 55 அடி நீளமான உயிரினமொன்றினுடையதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆமா இந்தக் கப்பலை எப்படி கடல்ல இறக்குவாங்க? (VIDEO)
Next post கிளிமூக்கு’ மீனுக்கு டாட்டூஸ் குத்தும் சீன வாஸ்துப் பிரியர்கள்..!!