உலகின் சிறந்த கடற்கரைகளில் ‘உனவடுனவுக்கு’ 79ஆவது இடம்..!!

Read Time:2 Minute, 4 Second

download (5)

உலகிலுள்ள சிறந்த 100 கடற்கரைகளுள் இலங்கையின் “உனவடுன’ கடற்கரை 79 ஆவது இடத்தினை பெற்றுள்ளது.  சி.என்.என். செய்தி நிறுவனத்தால் நடத்தப்பட்ட தரப்படுத்தலிலேயே இலங்கைக் கடற்கரை சிறந்த 100 கடற்கரைகளுள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பல்வேறு பட்ட நிலப்பகுதிகளை தரப்படுத்தலுக்குட்படுத்தி அதில் சிறந்த நிலப்பகுதிகளை தெரிவு  செய்யும் சி.என். என். செய்தி நிறுவனம் இம்முறை உலகிலுள்ள கடற்கரைகளை தரப்படுத்தலுக்குட்படுத்தி அதில் சிறந்த 100 கடற்கரைகளைத் தெரிவு செய்துள்ளது.

சுற்றுலா  பயணிகளால் ஈர்க்கப்பட்ட அனைத்து நாடுகளும் குறித்த தரப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டதுடன் அதில் சிறந்த நூறு கடற்கரைகள் அறிவிக்கப்பட்டது. உலக நாடுகளில் காணப்படும் சிறந்த கடற்கரைகளுள் முதலாவது  இடத்தினை சீசெல்ஸ், டிக்யூ தீவில் அமைந்துள்ள கிரேன்டி அன்சே கடற்கரை பெற்றுள்ளது.

இதில் இலங்கையின் கடற்கரையான உனவடுன 79 ஆவது   இடத்தினை  பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட உனவடுன கடற்பகுதி இன்று சிறந்த 100 கடற்கரைகளுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டமை பெருமைக்குரிய விடயமாக கருதப்படுமென சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.   அத்துடன், கடலலைச் சறுக்கல் விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறந்த 100 கடற்கரைகளுள் 46 ஆவது இடத்தினை அறுகம்பே கடற்கரை பெற்றுள்ளதாக சி.என்.என்.  அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..!!
Next post வடக்கில் நியாயமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் : ஐ.தே.க. வலியுறுத்தல்..!!