கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகாவிற்கு புற்றுநோய்- கவனிப்பாரில்லை..!!

Read Time:3 Minute, 18 Second

1411kanagaதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கனகா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை தேவிகாவின் மகளான கனகா கரகாட்டக்காரன் என்ற பெரும் வெற்றிப் படத்துடன் தமிழ் சினமாவில் அறிமுகமாகி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையானார்.

தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்தது போல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என்று பிரபல முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார் கனகா.

இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளில் வெற்றி பெற்று பரபரப்பான நடிகையா இருந்தநிலையில் திடீரெ சினிமாவிலிருந்து 1999ஆம் அண்டிற்கு பின்னர் காணாமல் போனார்.

2000ஆம் ஆண்டு அவரது தாயும் மரணமானதைத் தொடர்ந்து கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டார் கனகா. தொடர்ந்து 2004ஆம் ஆண்டில் குஸ்ருதி என்ற மலையாளப் படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

2007ஆம் ஆண்டில் கனகா யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தியும் வெளியானது.

தொடர்ந்து கனகா உடல்நிலை பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அதுவும் மறைந்து போயின.

இந்நிலையில் கேரளாவில் உள்ள அனாதைகள் மற்றும் கவனிப்பாரின்றி அவதிப்படுவோரை பராமரித்து வரும் மருத்துவமனையில் புற்றுநோய் பாதிப்புக்குகள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனகாவின் இந்த நிலைமையை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சுமார் 10 வருடங்களாக தமிழ்சினிமா ரசிகர்களை தன் காந்த கண் அழகால் ரசிகர்களை கவர்ந்த கனகாவின் நிலைமை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் கவனிப்பாரற்ற நிலையில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்ட சம்பவங்கள் ஏற்கெனவே ஏராளமாக உண்டு. ஆனாலும் அது தொடர்பில் தமிழ்சினிமா நலன் விரும்பிகள் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழந்தாளிடச் செய்யப்பட்ட ஆசிரியை வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு..!!
Next post குப்பையில் போட்ட அதிர்ஷ்ட சீட்டுக்கு 79 கோடி ரூபா பரிசு..!!