திருமண வைபவத்தில் மணமக்கள் தோழிகள், தோழர்களாக நாய்கள்…!!
பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியொன்று தமது திருமண வைபவத்தில் நாய்க்குட்டிகளை மணமகள் தோழிகளாகவும் மணமகன் தோழர்களாகவும் பயன்படுத்தியுள்ளது.
டேனியல் ஹில் (34) என்பவரும் அவரின் காதலியான லூயிஸ் ஹரிஸுமே (31) தமது திருமண வைபவத்தை இவ்வாறு விநோதமாக நடத்தியுள்ளனர். மணமகள் லூயிஸ், செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் கடையொன்றை நடத்தி வருகிறார்.
நாய்கள் மீது ஆர்வம் கொண்ட அவர், தனது திருமண வைபவத்தின்போதும் நாய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தீர்மானித்தார்.
நான்கு நாய்க்குட்டிகளுக்கு விசேட ஆடைகளையும் தயாரித்து அணிவித்து திருமண வைபவத்தில் பங்குபற்றச் செய்தார் லூயிஸ். நாய்களுக்கான ஆடை, உணவு முதலானவற்றுக்காக 8000 ஸ்ரேலிங் பவுண்களை அவர் செலவிட்டாராம். சபோல்க் நகரில் நடைபெற்ற திருமண வைபவத்தில் இந்நாய்க்குட்டிகளை பராமரிப்பதற்காக 4 பெண்களையும் அவர் நியமித்திருந்தார்.
“எனது வாழ்க்கையின் மிக முக்கியமான தினத்தில் நாய்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன். ஏனைய விருந்தினர்கள் ஐஸ் கிறீம் உண்ணும்போது நாய்களுக்கும் ஐஸ்கிறீம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விசேட சில ஐஸ்கிறீம்களை கொண்டுவர ஏற்பாடு செய்தேன்.
திருமண வைபத்தில் நாய்களை வைத்திருப்பதற்கு அனுமதியளிக்கக்கூடிய இடத்திலேயே நான் திருமணம் செய்தேன். நாய்கள் என் வாழ்வில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating