‘ஸ்டார் வோர்ஸ்’ திரைப்பட கற்பனை நகரம் மண்ணில் புதையுண்டு அழியும் அபாயம்..!!

Read Time:2 Minute, 10 Second

download (13)உலகின் அனைத்து பாகங்களிலும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஸ்டார் வோர்ஸ் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை நகரம் மண்ணில் புதையுண்டு அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

விஞ்ஞான புனைக்கதை திரைப்படமான ‘ஸ்டார் வோர்ஸ்’ ஹொலிவூட்டில் 1977ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது.

இத்தொடரின் 4ஆவது பாகமான த பென்தம் மெனஸ் திரைப்படத்திற்காக டுனிஸியாவிலுள்ள பாலைவனத்தில் கற்பனையாக ‘மொஸ் எஸ்பா’ என்ற வேற்றுக்கிரக நகரமொன்று உருவாக்கப்பட்டது.

இந்த கற்பனை நகர் டுனிஸியாவின் சுற்றுலாப் பயணிகள் இடமாக பின்னர் மாறியிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த நகர் முழுமையாக மண்ணில் புதையுண்டு போவதற்கான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. ஏனெனில் வில் வடிவிலான மணல் பரப்பினருகே இந்த நகர் அமைந்திருப்பதே இதற்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வில் வடிவ மணல் திட்டு வருடத்திற்கு 15 மீற்றர்கள் வரை நகரக்கூடியது. இவ்வாறு நகர்ந்து வரும் இந்த மணல் திட்டு தற்போது கற்பனை நகரை அண்மித்து விட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன

இதேவேளை, நகரும் மணற்திட்டிலிருந்து மொஸ் எஸ்பா நகரை பாதுகாக்க டுனிஸியாவின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1401starwars 1401starwars-2

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலி பஸ் விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..!!
Next post ஆலிவுட் பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் யார்?