சவூதியில் மெட்ரோ ரயில் திட்டம்..!!
Read Time:1 Minute, 3 Second
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன் கட்டுமானப்பணிகள் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு இந்த ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும்.
இதற்கான திட்ட மதிப்பீடு 22 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 180 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த மெட்ரோ ரயில் திட்டம் டுபாய் மெட்ரோவைவிட பெரியதாகும்.
ஆறு வழி போக்குவரத்தைக் கொண்டதாக அமையவுள்ள இந்தத் திட்டம் உலகின் மிகப் பெரிய போக்குவரத்து முயற்சி என்பதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Average Rating