யாழில் 20 கட்சிகள் போட்டி..!!

Read Time:2 Minute, 32 Second

imagesவட மாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 20 கட்சிகள் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமன பத்திரங்களை தாக்கல் செய்யும் காலப்பகுதி இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ளது. அதன் பின்னரான பத்திரிகையாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறும் எனவும் இத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 கட்சிகள் நியமன பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் அவற்றில் 13 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 10 சுயேட்சை குழுக்களும் உள்ளடங்குவதாகவும் அவற்றில் 20 கட்சிகளே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜாதிக சங்வர்த்தன பெரமுன, எமது தேசிய முன்னணி, ஆகிய இரண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் மற்றும் முருகன் குமாரவேல் தலைமயிலான ஒரு சுயேட்சை குழுவினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாண சபை தேர்தலின் போது யாழ். நிர்வாக மாவட்டத்தில் 526 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளதாகவும் 4 லட்சத்து 26 ஆயிரத்து 703 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இம்முறை யாழ். பிரதேச செயலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக வாக்கென்னும் நிலையத்தினை யாழ்.மத்திய கல்லூரியில் நிறுவுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீ விபத்தில் 3 குழந்தைகளை பறிகொடுத்த நியூசிலாந்து தம்பதிக்கு இரட்டை குழந்தை..!!
Next post உடலில் செதில்கள் கொண்ட சிறுவன்..!!