சிரிய ஆயுத கிடங்கு மீது போராளிகள் ராக்கெட் தாக்குதல் – 40 பேர் பலி…!!

Read Time:4 Minute, 7 Second

downloadசிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.

ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

28வது மாதத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 191 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 36 ஆயிரத்து 661 அப்பாவி பொதுமக்கள் என்று சிரியாவின் உள்நாட்டு போர் நிலவரத்தை கண்காணித்து வரும் இங்கிலாந்து நாட்டின் மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 65 ஆயிரம் மக்கள் சிரியாவில் இருந்து வெளியேறி லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, லெபனானில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சிரியா நாட்டினரின் எண்ணிக்கை 5 லட்சத்து 68 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சன்னி போராளிகள் வசம் கடந்த 2 ஆண்டு இருந்த கல்டியே மாவட்டத்தை அதிபரின் படைகள் கடந்த திங்கட்கிழமை கைப்பற்றின.

இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாம்ஸ் பகுதியில் உள்ள ஆயுத கிடங்கின் மீது போராளிகள் ராக்கெட்டை ஏவி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

வாடி அல்-சஹாப் மாவட்டத்தில் உள்ள ஆயுத கிடங்கின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.

நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதேபோல் அக்ருமா மற்றும் அல்-நோழா மாவட்டங்களிலும் போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை வேனில் மாணவிமீது பாலியல் வல்லுறவு..!!
Next post ஒபாமாவுக்கு கொம்பு வைத்த கில்லாடி பல்­கலை மாணவிகள்..!!