பரபரப்பான ஆட்டத்தில் பராகுவே அணியை வீழ்த்தியது சுவீடன்

Read Time:4 Minute, 28 Second

W.Football.jpgஉலக கோப்பை கால்பந்தின் 7-வது நாளான நேற்று `ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஈக்வடார்- கோஸ்டாரிகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. அந்த அணியில் டேனோரியா கார்லோஸ், அகஸ்டின், கவிடேஸ் இவான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். நுரிம்பர்க்கில் நடந்த `பி’ பிரிவுகளுக்கிடையேயான ஆட்டத்தில் இங்கிலாந்து- டிரினிடாட்டை சந்தித்தது. இங்கிலாந்து கேப்டன் பெக்காம், லம்பார்டு, குரோச், ஓவன் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் கோல் அடிக்க தவறிவிட்டனர். முதல் பாதியில் இரு அணியும் கோல் போடவில்லை.

இதனால் 2-வது பாதியில் எப்படியும் வெற்றி பெற்று தீரவேண்டும் என்ற எண்ணத் தில் ரூனி களம் இறக்கப்பட்டார். வெகுநேர போராட்டத்திற்கு பின் பெக்காம் அடித்த பந்தை 83-வது நிமிடத்தில் குரோச் தலையால் முட்டி கோல் அடித் தார். மேலும் கடைசி நிமிடத்தில் ஸ்டீபன் ஜெர்ரார்டு ஒரு கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் டிரினிடாட்டை வென்றது.

`பி’ பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் சுவீடன்-பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் கிம்கால்ஸ்ட்ராம் 25 மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். ஆனால் பராகுவே கோல் கீப்பர் அல்டோபாப் அடிலா அருமையாக அதை தடுத்தார். அடுத்த நான்கு நிமிடங்களில் கால்ஸ்ட்ராம் மீண்டும் கோல் அடிக்க முயற்சி செய்தார். இதுவும் வீணானது.

சுவீடன் வீரர்களின் கோல் அடிக்கும் வாய்ப்பை அல்டோ பாப் பல முறை தடுத்தார். மேலும் பராகுவேயின் பின் களஆட்டம் சிறப்பாக இருந்ததால் சுவீடன் வீரர்கள் கோல் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால் ஆட்ட நேர முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் 88-வது நிமிடத்தில் சுவீடனின் பிரிடி ஜங்டெர்க் தலையால் முட்டி ஒரு கோலை அடித்தார். இதனால் சுவீடன் 1-0 என முன்னிலை அடைந்தது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பிரிடி மேலும் கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை பராகுவே கோல் கீப்பர் தடுத்துவிட்டார். முடிவில் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சுவீடன் இந்த வெற்றியின் மூலம் 2-வது சுற்றுக்கான வாய்ப்பை சற்று பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக 20-ந் தேதி நடை பெறும் ஆட்டத்தை டிரா செய்தால் எளிதாக 2-வது சுற்றில் நுழைந்துவிடும். சுவீடன், டிரினிடாட்டிற்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் பராகுவேக்கு எதிரான ஆட்டத்தில் டிரினிடாட் வெற்றி பெற்றுவிட்டால் சுவீடனும், டிரினிடாட்டும் ஒரே புள்ளிகளுடன் சம நிலைப்பெறும். இதில் கோல் அடிப்படையில் ஏதாவது ஒரு அணி 2-வது சுற்றுக்கு தேர்வு செய்யப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஹெப்பற்றிக்கொல்லாவ பயங்கரம் 12 சிறுவர் சிறுமியர் உட்பட 62 பஸ் பயணிகள் படுகொலை
Next post 3 நாட்கள் `லிப்டி’ல் சிக்கி தவித்த நோயாளி