பல்வேறு நாடுகளின் 10,000 கொக்காகோலா பேணிகளை சேகரித்த நபர்..!!

Read Time:2 Minute, 28 Second

1502cocaஇத்­தா­லியைச் சேர்ந்த நப­ரொ­ருவர் விதம்­வி­த­மான கொக்கா­கோலா பேணி­களை சேக­ரிப்­பதை வழக்­க­மாகக் கொண்­டுள்ளார்.

அவர் தனது பதின்ம வய­தி­லி­ருந்து உலகின் பல நாடு­க­ளி­லி­ருந்தும் 10 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட கொக்கா-­கோலா பேணி­களை சேக­ரித்­துள்ளார்.

39 வய­தாகும் டேவிட் அன்­டனி  15 வய­தி­லி­ருந்து கொண்­டாட்­டங்­களின் நினை­வாக விசே­ட­மான பேணி­களை  சேக­ரிக்க ஆரம்­பித்­துள்ளார்.

கொக்கா­கோலா  விற்­பனை செய்­யாத கியூபா, வட கொரியா உள்­ளிட்ட சில நாடுகள் தவிர கிட்­டத்­தட்ட உலகின் அனைத்து நாடு­க­ளி­லி­ருந்தும் பேணி­களை  சேக­ரித்­துள்ளார்.

இது குறித்து டேவிட் கூறு­கையில், ‘நான் சிறு வயது முதல் பேணி­களை சேக­ரிக்க ஆரம்­பித்தேன். எனது தந்தை வெளி­நா­டு­க­ளுக்கு வியா­பார பய­ணங்கள் மேற்­கொண்டு திரும்­பு­கையில் வித்­தி­யா­ச­மான பேணி­களை பல்­வேறு நக­ரங்­க­ளி­லி­ருந்து கொண்டு வந்து தருவார்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது இவர் தன்­னி­ட­முள்ள தொகுப்பின் பாதி­யினை காட்­சிப்­ப­டுத்­தி­யுள்ளார். இதன்­போது சில பேணி­கள் காணா­மலும் போய்­விட்­டதாம்.

டேவிட் தனது தொகுப்பில், கொக்கா-­கோலாவின் அரியவகை கோல்ட் டின், டயமன்ட் டின் மற்றும் பிரத்­தி­யே­க­மாக தொழி­லா­ளர்­க­ளுக்­கென வடி­வ­மைக்­கப்­பட்ட டின்­க­ளையும் வைத்­துள்ளார்.

இந்­நி­லையில் அதில் ஒரு தொகுதி கோல்ட் பதிப்­பினை ஒரு பேணி­யை 400 முதல் 500 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு விற்பனை செய்ய அவர் எதிர் பார்த்துள்ளார். இது தொடர்பான விபரங்களை டேவிட் அவரது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக… சில வாரங்களில் மரணிக்கப் போகும் குழந்தை..!!
Next post முதல் பறக்கும் சைக்கிள் கண்டுபிடிப்பு..!!