விமானத்தை பயன்படுத்தாமல் 201 நாடுகளுக்கும் சென்று வந்த முதல் மனிதர்..!!

Read Time:3 Minute, 29 Second

1505Graham-Hughes

பிரித்­தா­னி­யாவின் லிவர்பூல் நகரைச் சேர்ந்த 33 வய­தான கிரஹம் ஹியூக்ஸ் என்ற நபரே இப்­பெ­ரு­மை­யினைப் பெற்­ற­வ­ராவார். இவர் உல­கி­லுள்ள 201 நாடு­களை 1426 நாட்­களில் (சுமார் நான்கு ஆண்­டுகள்) விமா­னத்தின் உத­வி­யின்றி சுற்றி வந்­துள்ளார்.

சுமார் 160 ஆயிரம் மைல் தூரம் பய­ணித்­துள்ள ஹியூக்ஸ், விமா­ன­மின்றி சரக்குக் கப்பல், பஸ், ரயில், டெக்ஸி போன்ற வாக­னங்­க­ளிலேயே பய­ணத்துள்ளார்.

கிரஹம் ஹியூக்ஸ் கடந்த 2009ஆம்  ஆண்டு ஜன­வரி 1ஆம் திகதி லிவ­பூ­லி­லி­ருந்து தனது பய­ணித்தை ஆரம்­பித்தார். கடந்த வருடம் டிசம்பர் மாத­ம­ளவில் தென் சூடானை சென்­ற­டைந்­த­துடன் வெற்­றி­க­ர­மாக பய­ணத்­தினை முடிவு செய்­துள்ளார். இவர் பய­ணத்தை ஆரம்­பித்த வேளையில் தென் சூடான் எனும் நாடு உரு­வா­கி­யி­ருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதன்­போது இலங்கை உட்­பட ஆசியா, ஆபி­ரிக்கா, மத்­திய கிழக்கு, ஐரோப்பா, மத்­தி­ய-­ வ­ட-தென் அமெ­ரிக்கா, கரீ­பியன் தீவுகள் என அனைத்து இடங்­க­ளுக்கும் பய­ணித்­துள்ளார். தற்­போது ஹியூக்ஸ் தனது பய­ணத்­தினை 4 நிமிட ஆவ­ணப்­ப­ட­மாக வெளி­யிட்­டுள்ளார். ஒவ்­வொரு நாட்டின் காட்­சி­யையும் ஏறத்­தாழ தலா ஒரு விநாடி அதில் இடம்­பெறச் செய்­துள்ளார்.

இப்­ப­ய­ணத்தின் போது உடைந்த படகில் சென்ற திகில் அனு­பவம், பொலி­ஸா­ரினால் கைது, கடற்­கொள்­ளை­யர்­களின் அச்­சு­றுத்தல் போன்ற சம்­ப­வங்­க­ளையும் அவர் எதிர்­கொண்­டுள்ளார்.

கொங்­கோவில் தான் உள­வாளி என்ற சந்­தே­கத்தில் சிறையில் அடைக்­கப்­பட்­ட­தா­கவும் ரஷ்­யா­வுக்குள் ஊடு­ருவ முயன்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்­ கூ­றி­யுள்ளார். முதல் தடவை ஆபி­ரிக்க நாடான மால்­டாவை மறந்­து­விட்­டாராம். பின்னர் இரண்­டா­வது தடவை பயணம் மேற்­கொண்டு மால்­டாவில் கால் பதித்­தாராம்.

கடல்­க­டந்து செல்ல வேண்­டிய இடங்­க­ளுக்கு பெரும்­பாலும் சரக்­குக் கப்­பல்­களில் அவர் பய­ணித்­துள்ளார். ஆனால், டொமி­னிக்கன் குடி­ய­ரசு நோக்கிச் செல்­லும்­போது உல்­லாசப் பய­ணக் கப்­ப­லொன்றில் பய­ணிக்கும் வாய்ப்பு கிடைத்­ததாம்.

இந்த பயணத்தின் போது ஹியூக்ஸ் வாரத்திற்கு 100 ஸ்ரேலிங் பவுண்களை செலவு செய்துள்ளார். மேலும் குடிநீர் திட்டத்திற்காக 9 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்  நிதியும் சேகரித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி மீண்டும் ‘மேயர்’ ஆனதைக் கொண்டாடிய 4 வயது அமெரிக்கச் சிறுவன்..!!
Next post அல்ஜீரியாவில் கட்டாய நோன்புக்கு எதிராக மதிய உணவு உட்கொண்டு ஆர்ப்பாட்டம்..!!